என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதுவை மாநில அந்தஸ்து"
புதுச்சேரி:
புதுவை மாநிலம் யூனியன் பிரதேசமாக உள்ளதால் மற்ற மாநிலங்களை போல் முழு அதிகாரம் வழங்கப்படவில்லை.
மத்திய அரசின் உள்துறையின் கட்டுப்பாட்டில் புதுவை இயங்கி வருகிறது. எனவே, புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் புதுவை மாநிலம் மீது மத்திய அரசு சமீப காலமாக அதிக அதிகாரம் செலுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் புதுவை கவர்னர் கிரண்பேடி தனக்குத்தான் கூடுதல் அதிகாரம் இருப்பதாக கூறி நிர்வாக விஷயங்களில் தலையிட்டு வருகிறார்.
எனவே, புதுவைக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், கவர்னர் கிரண்பேடியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்துவது என்று காங்கிரஸ் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தை எதிர்க் கட்சியான என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.
டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து இருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 21 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க விரும்பும் தொண்டர்களின் பட்டியல் பெறப்பட்டு அவர்கள் ரெயில் மூலம் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
புதுவையில் இருந்து டெல்லி செல்லும் ரெயிலில் நேற்று முன்தினம் 380 தொண்டர்கள் புறப்பட்டு சென்றனர்.
அவர்களை புதுவை ரெயில் நிலையத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வழியனுப்பி வைத்தனர். இதே போல் காரைக்காலில் இருந்து 40 தொண்டர்கள் டெல்லி சென்றனர்.
இதையடுத்து நேற்றைய தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் டெல்லி சென்றனர். அங்கு அவர்கள் கரோல் பார்க்கில் உள்ள தனியார் விடுதியில் தங்கினர்.
இதற்கிடையே புதுவையில் இருந்து டெல்லி சென்ற ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் டெல்லியை அடைந்தது. அங்கு கட்சி தொண்டர்களை புதுவை காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர்.
டெல்லியில் உள்ள புதுவை, சத்தீஸ்கார், மத்திய பிரதேசம் அரசு விடுதிகள் மற்றும் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
அங்கிருந்து இன்று காலை 10 மணி அளவில் பஸ்கள் மூலம் ஜந்தர் மந்திர் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். ஜந்தர் மந்திரில் காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
ஆர்ப்பாட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, கலக்கண்ணன், தி.மு.க. அமைப்பாளர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ. பொழிலன், புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம் மற்றும் கட்சி தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, தனபால், விஜயவேணி ஆகியோரும் பங்கேற்றனர்.
தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் ராஜா மற்றும் பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையையும், கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆங்கிலத்தில் பதாகைகள் வைத்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மத்திய மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோரை சந்தித்து மனு அளிக்க உள்ளனர். #governorkiranbedi #narayanasamy
புதுச்சேரி:
புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியதாவது:-
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றவர். பாராளு மன்றத்தில் சிறப்புடன் பணியாற்றியவர். கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சி தலைவர்களோடு நட்புணர்வோடு பழகக்கூடியவர். அவர் புதுவைக்கு முதல்- அமைச்சராக வருவதை பெருமையாக நினைத்தோம்.
அவர் மூலம் புதுவைக்கு பல முன்னோடி திட்டங்கள் கிடைக்கும். மத்திய அரசிடம் பேசி பெற்றுத்தருவார் என எதிர்பார்த்தோம். ஆனால் யானைக்கு அங்குசம்போல நாராயாணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி திகழ்கிறார்.
நடைமுறையில் உள்ள திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை. புதிதாக எந்த திட்டத்தையும் கொண்டுவர முடியவில்லை. நாராயணசாமி தனது சாதுர்யத்தால் கவர்னரை எதிர்த்து திறம்பட செயல்பட்டு வருகிறார்.
கல்வி, சுகாதாரம், சட்டம்- ஒழுங்கு, வளர்ச்சி பெறும் மாநிலம் ஆகியவற்றில் புதுவைக்கு விருது பெற்றது நாராயணசாமியின் திறமைக்கு சான்று.
தனக்கு சால்வை கொடுத்த அதிகாரியிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டவர் கிரண்பேடி. வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பிய அதிகாரியை கண்டித்து கீழ்த்தரமாக நடந்து கொண்டவர். பா.ஜனதா நாடு முழுவதும் தாங்களே ஆள வேண்டும் என்ற மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர். இதற்காக பா.ஜனதா அல்லாத மாநில அரசுகளை செயல்பட விடாமல் தடுக்கின்றனர்.
யூனியன் பிரதேசமான புதுவை மத்திய அரசை சார்ந்துதான் உள்ளது. ஆனால் மத்திய அரசு புதுவை, தமிழகத்திற்கு தர வேண்டிய எந்த முக்கியத்துவத்தையும் அளிக்கவில்லை. மாற்றாந்தாய் மனப் பான்மையுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய பா.ஜனதா அரசை இதே ஒற்றுமையுடன் வீறுகொண்டு எதிர்ப்போம், வீழ்த்துவோம், வீட்டுக்கு அனுப்புவோம்.
இவ்வாறு அவர் பேசினார். #kanimozhi #dmk #centralgovernment
புதுச்சேரி:
யூனியன் பிரதேசமான புதுவைக்கு நீண்ட பல ஆண்டுகளாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
நாட்டிலேயே டெல்லியும், புதுவையும் மட்டுமே சட்ட மன்றம் உள்ள யூனியன் பிரதேசமாக திகழ்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றம் இருந்தாலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அங்கமாகவே புதுவை யூனியன் பிரதேசம் கருதப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதுவை சட்ட சபைக்கு மத்திய அரசு நேரடியாக 3 எம்.எல்.ஏ.க் களை நியமித்தது. மத்திய அரசின் நேரடி நியமனம் செல்லும் என ஐகோர்ட்டு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. அதோடு நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் உண்டு என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தொடர்ந்து நீடிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும். சட்ட மன்ற ஜனநாயகத்தை கேள்வி குறியாக்கியுள்ளது. அதே நேரத்தில் புதுவை கவர்னராக இருக்கும் கிரண்பேடியும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தனக்கே அதிகாரம் உள்ளது என கூறி மாநில நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார்.
நியமன எம்.எல்.ஏ. விவகாரம், கவர்னர் கிரண்பேடி நடவடிக்கை ஆகியவற்றால் புதுவை மாநில உரிமைக்கு பங்கம் ஏற்பட்டிருப்பதாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன. மாநில உரிமைகளை பெற மாநில அந்தஸ்தே தீர்வு என ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையில் நடந்த அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
புதுவை மாநில அந்தஸ்து வழங்க வேண்டு. கவர்னர் கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்த அனைத்து கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக டெல்லியில் ஜந்தர் மந்தர் முன்பு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு புதுவை அரசியல் கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க புதுவையில் இருந்து டெல்லி செல்லும் வாராந்திர டெல்லி ரெயிலில் 21 அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த 420 தொண்டர்கள் புறப்பட்டு சென்றனர். இவர்கள் நாளை அதிகாலை 3 மணியளவில் டெல்லியை அடைகின்றனர்.
இதற்கிடையே இன்று (வியாழக்கிழமை) முதல்- அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கின்றனர். டெல்லியில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் புதுவை அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய மந்திரிகள் மற்றும் எதிர்க் கட்சி தலைவர்களை சந்தித்து மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கின்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு டெல்லி சென்றுள்ள அரசியல் கட்சி தொண்டர்கள் தங்குவதற்கு விடுதி, உணவு, போக்குவரத்திற்கு பஸ் வசதி ஆகியவற்றை புதுவையை ஆளும் காங்கிரஸ் கட்சி செய்துள்ளது.
ஆளும் கட்சிக்கு பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் மாநில அந்தஸ்து விவகாரத்தை பெரிதுபடுத்துவதாக புதுவை சட்டமன்றத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகள் என்.ஆர்.காங்கிரசும், அ.தி.மு.க.வும் குற்றம் சாட்டியது. அதோடு டெல்லி போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் எனவும் அறிவித்தன. இதன்படி என்.ஆர்.காங்கிரசும், அ.தி.மு.க.வும் டெல்லி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை. #narayanasamy #kiranbedi
புதுவை சட்டசபைக்கு மத்திய பா.ஜனதா அரசு தனது கட்சியை சேர்ந்த சுவாமிநாதன், சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகிய 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நேரடியாக நியமித்தது.
மாநில அரசின் பரிந்துரையின்றி நியமிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது என சென்னை ஐகோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தது. ஆனால், வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மத்திய அரசின் நியமனம் செல்லும் என தீர்ப்பளித்தது.
தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதிசெய்தது.
அதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய அனைத்து உரிமைகளும் சலுகைகளும் ஓட்டுரிமையும் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு புதுவை அரசியல் கட்சிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஏனெனில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டிருப்பது மத்தியில் ஆளும் கட்சியின் தயவில்லாமல் புதுவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட கட்சி ஆட்சியில் தொடர முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இதன்படி வருகிற 4-ந்தேதி டெல்லியில் ஜந்தர் மந்திர் அருகில் புதுவை அனைத்து கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்த தகவலை புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் இன்று தெரிவித்தார். #PondicherryAllparties
நாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களில் சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசமாக டெல்லியும், புதுவையும் திகழ்கிறது.
தலைநகராக உள்ள டெல்லி யூனியன் பிரதேசத்திற்கு சட்டமன்றம் இருந்தாலும் அதிகாரம் குறைவு. நிலம், சட்ட ஒழுங்கு, பாதுகாப்பு ஆகியவை மத்திய அரசின் வசம் உள்ளது. ஆனால் புதுவை சட்டமன்றத்திற்கு டெல்லியை விட கூடுதல் அதிகாரம் உள்ளது.
இந்த நிலையில் புதுவை கவர்னராக கிரண்பேடி நியமிக்கப்பட்ட பிறகு அவர் தனக்கே அதிகாரம் இருப்பதாக தொடர்ந்து கூறி வருகிறார்.
அதோடு அரசின் அன்றாட பணிகளிலும் அவர் தலையிட்டு வருகிறார். கவர்னருக்கு அனுப்பும் கோப்புகளுக்கு உடனடியாக அனுமதி கிடைப்பதில்லை. அதேநேரத்தில் மக்களால் தேர்வு செய்த அரசு இருக்கும் போது கவர்னருக்கு அதிகாரம் கிடையாது என ஆளும் காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர்.
சமீபத்தில் டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம்ஆத்மி கட்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கோர்ட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என தீர்ப்பளித்தது.
இதையடுத்து யூனியன் பிரதேசமான புதுவைக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும் என ஆட்சியாளர்கள் கூறினர். ஆனால், கவர்னர் கிரண்பேடி டெல்லி யூனியன் பிரதேச சட்ட விதிகள் வேறு, புதுவை சட்ட விதிகள் வேறு. கோர்ட்டின் தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது என கூறி வருகிறார்.
அதோடு தொடர்ந்து அரசின் நிர்வாக பணிகளில் தலையிட்டு வருகிறார். காங்கிரஸ் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருகிறது.
இதுதொடர்பாக சட்டசபையில் விவாதம் நடந்தது. அப்போது அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன், தி.மு.க. உறுப்பினர் சிவா ஆகியோர், இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
கூட்டத்தொடரை பாதியில் நிறுத்திவிட்டு டெல்லிக்கு அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களை அழைத்து செல்லுங்கள். அங்கு பிரதமர், உள்துறை மந்திரி, அனைத்து கட்சி தலைவர்களை சந்தித்து முறையிடுவோம்.
புதுவைக்கு மாநில அந்தஸ்து கோருவோம். அப்போதுதான் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க முடியும் என சட்டசபையில் வலியுறுத்தினர். இதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி சம்மதம் தெரிவித்தார்.
டெல்லியில் தலைவர்களை சந்திக்கும் தேதி வருகிற 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை இருக்கும். இதில் தாங்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என கையெழுத்திட்டு அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் நாராயணசாமி கொடுத்துள்ளார்.
சட்ட சபைக்கு வந்த முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறும்போது, நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை நான் டெல்லிக்கு செல்கிறேன்.
வருகிற திங்கட்கிழமை (23-ந்தேதி) பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அரசியல் கட்சி தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். உறுப்பினர்கள் அனைவரும் வரும்படி அழைப்பு விடுத்துள்ளேன். அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களோடு பிரதமரை சந்திக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #Narayanasamy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்